தைத் திருநாளில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த மணமகனுக்கு நேர்ந்த சோகம்..!!

கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த மணமகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எம்.பீ.பிரதிப் ரஞ்ஜன் குமாரசிங்க என்ற 30 வயதுடைய பட்டதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த இளைஞர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவு செய்தவர் மாலைதீவில் 6 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.