தமிழில் வணக்கத்துடன் பொங்கல் வாழ்த்துக் கூறி அசத்திய பிரித்தானியப் பிரதமர்..!!

உலகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழில் வணக்கம் கூறி பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம் பிரிட்டனில் உளள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள்.
இயற்கையின் அற்புதத்துக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள். கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் கடின உழைப்பை வழங்கி முன்களத்தில் நின்று பணியாற்றிய தமிழ் மருத்துவர்களுக்கு பாராட்டுகள். உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.