தைப்பொங்கல் தினத்தில் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி..50,000 தொற்றாளர்களை கடந்த 94வது நாடானது இலங்கை!!

50,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவான 94வது நாடாக இலங்கை நேற்று பதிவானது.நேற்று இலங்கையில் 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,224 ஆக உயர்ந்தது. இதேவேளை, 646 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,267 ஆக உயர்ந்தது.ஒரு வெளிநாட்டவர் உட்பட 7,050 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரொனா தொற்று சந்தேகத்தில் 653 நபர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.