நுகர்வோருக்கு மிக முக்கிய அறிவித்தல்..அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது..!! உணவுத் திணைக்களம்

அரிசி, சீனி, பருப்பு ,டின்மீன் உட்பட அத்தியாவசிய பொருட்கள் போதியளவில் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கும் உணவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜே.கிருஷ்ணமூர்த்தி, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பதற்றமடைய வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கையிருப்பில் உள்ள அரிசி, மா, பருப்பு, சீனி, ரின்மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களும் சந்தையில் தாரளமாக கிடைக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.