குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிடும் உணவு உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும் என்று பலரும் சொல்லி கேட்டிருக்கிறோம். குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்; இல்லாவிட்டால உடல் எடை கூடிவிடும் என்று சொல்வதுண்டு. உண்மையிலேயே இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?


ஒரு நாள் முழுவதிற்கும் சாதாரண ஆணுக்கு 2,500 கலோரிகள் தேவைப்படுகிறது. அது போல ஒரு பெண்ணுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அதற்கு மேல் உணவை நாம் உண்டால். உதாரணமாக 3000 ஆயிரம் கலோரி உணவை நாம் உண்டால், மீதமுள்ள 500 கலோரிகளும் உடலில் கொழுப்பாக தங்கி விடுகிறது. இதனால் உடை எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், ஏக காலத்தில் உணவையும் குறைத்து, உடல் பயிற்ச்சியிலும் ஈடுபட்டால் போதும். உடனே உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும். அவ்வளவு தான்.இது கேட்பதற்கு மிகவும் இலகுவானது..ஆனால், இதை நடைமுறைப்படுத்துவது பலருக்கும் இன்றும் கடினமாகத் தான் இருக்கின்றது..இது தான் யதார்த்தம்.