காட்டுக்குள் வீசப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோயின் மீட்பு!

கொஸ்கொட வனப்பகுதியில் 20 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட ஹெராயின் விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், மவுண்ட் லவ்னியா, கொஸ்கொட மற்றும் பேலியகொட ஆகிய இடங்களில் மூன்று பெரிய அளவிலான சோதனைகள் நேற்று நடத்தப்பட்டது.

சோதனையின்போது ஒரு சந்தேக நபர் 50 கிராம் ஹெரோயினுடன் பெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், மற்றொரு சந்தேக நபர் 20 கிராம் ஹெரோயினுடன் மவுண்ட் லவ்னியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.