இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சக வீரரான எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் பேங்கொக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.இவர்கள் இருவரும், தாய்லாந்து பகிரங்க தொடரில் பங்கேற்கவிருந்தனர். எனினும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், இருவரும் தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பேங்கொக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் சாய்னா நேவாலின் கணவர் காஷ்யப்பும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.