சிறைக் கைதிகளின் உடைக்கு மாற்றப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கா..!!

நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேனையிலுள்ள இளம்குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்திற்கு தனிமைப்படுத்தலிற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவர் உடனடியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் சென்ற பின்னர் தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேனை திருத்தம் மையத்திற்கு சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதிகளுக்கான சிறப்பு உடையில் ராமநாயக்க சிறை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டார்.4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவுள்ளார்.அவருக்கு மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லாததால், அவரது உறுப்புரிமை இழப்பது உறுதியானது என தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க,கடந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.ச சார்பில் 4 பேர் தெரிவாகினர்.விருப்பு வாக்கின் அடிப்படையில் 5வது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும, புதிய நாடாளுமன்ற உறுப்பினராகுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் ஐ.ம.ச விருப்பு வாக்கு விபரம் வருமாறு-சரத் ​​பொன்சேகா – 110,555,ரஞ்சன் ராமநாயக்க – 103,992,ஹர்ஷன ராஜகருணா – 73,612, கவிந்த ஜெயவர்தன – 52,026, அஜித் மன்னப்பெரும -47212