கொழும்பு மாநகரில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக நாளை முதல் ஆரம்பமாகும் இணையவழி அதிசொகுசு பேரூந்து சேவை..!!

கொழும்பு நகரை அண்டியதாக பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை (PARK AND RIDE CITY BUS) எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கொட்டாவ, மாக்கும்புர பல் போக்குவரத்து நிலையத்தை கேந்திரமாகக் கொண்டு காலை 6.00 மணி முதல் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற்காக 64 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் நடைபெறுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பஸ்களில் வைபை (WI-FI) வசதி செய்யப்பட்டுள்ளதோடு, மென்பொருளினூடாக பஸ் பற்றிய தகவலை பெற முடியுமெனவும் குறைந்த நேரத்தில் தேவையான இடத்தை அடையவும் முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு நுழையும் 5 பிரவேச வழிகளிலும் புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.