நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி..மிக விரைவில் நடைமுறைக்கு வரும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை..!!

அடுத்த வாரம் முதல் அத்தியாவசிய பொருட்கள் பல நிர்ணய விலையில் விற்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் ரூ.75, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.130, 1 கிலோ பச்சை அரிசி(கெக்குலு) ரூ.93, 1 கிலோ நாட்டரிசி ரூ.96 ஆகிய விலைகளில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.வர்த்தக அமைச்சில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக சோயா எண்ணெயை அறிமுகப்படுத்த அமைச்சு எதிர்பார்க்கிறது.இது தேங்காய் எண்ணெயின் இறக்குமதி செலவைக் குறைக்கும்.சோயா உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலாபகரமாகவும் சலுகை விலையிலும் விற்க, அமைச்சு ஓர் உடன்படிக்கைக்கு வரவுள்ளது.இதேவேளை பிரித்தானிய இலங்கை கூட்டுதாபன(பி.சி.சி.) ஒத்துழைப்புடன் சலுகை வீதத்தில் சவர்க்காரத்தை சந்தைக்கு வழங்கவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது என்றார்.