இலங்கை அரசியல் வாதிகளை துரத்தும் கொரோனா..இன்னுமொரு இராஜங்க அமைச்சருக்கும் தொற்று உறுதி!!

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராக விமலவீர திஸாநாயக்க பதிவாகியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா தொற்றையடுத்து, எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடாளுமன்றத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பரிசோதனையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.