ஒரே நாளில் இலங்கையை உலுப்பிய 8 கொரோனா மரணங்கள்!!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.நேற்று அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 240 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு; 233வது மரணம்:வெலிக்கடை சிறையிலிருந்து 52 வயதான ஆண் கைதி ஒருவர், வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

234வது மரணம்:இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.235வது மரணம்:மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

236வது மரணம்:கொழும்பு 12 புதுக்கடை/ வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.237வது மரணம்:கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

238வது மரணம்:பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

239வது மரணம்:களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.240வது மரணம்:காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.