கொரொனா தொற்று பரிசோதனைகளுக்கு உதவுங்கள்….ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..!

கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு பொது மக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பு-12, பண்டாரநாயக்கபுர மாவத்தையில் மாத்திரம் 59 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,கொழும்பு-12, பண்டாரநாயக்கபுர மாவத்தையில் மாத்திரம் 59 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அப்பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாக பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொள்கிறோம்.இந்த தொற்றில் இருந்து தப்புவதற்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.