சற்று முன்னர் வந்த செய்தி..இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு.!!

நாட்டில் மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி இன்று இதுவரை மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 766 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.மேலும், தொற்று உறுதியானவர்களில் 7 ஆயிரத்து 105 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 603 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 232 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னர் கிடைத்த செய்தி:நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.இன்று (திங்கட்கிழமை) புதிதாக மேலும் 285 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதேவேளை, இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 766 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.மேலும், தொற்று உறுதியானவர்களில் 6 ஆயிரத்து 342 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 603 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 232 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.