தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வடக்கில் இன்று 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலையில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த 2 பேரும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து ஒருவரும், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், முல்லைத்தீவை சேர்ந்த 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.