நித்திரையில் இருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!! பெரும் துயரில் பெற்றோர்!

இலங்கையின் மத்திய மலைநாட்டின் நோட்டன் – ஒஸ்போனில் நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரிய வருகையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலையில் கொண்டு செல்கையிலே அவர் உயிரிழந்துள்ளார்.சிறுவனை தீண்டிய பாம்பை இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பாம்பு தீண்டி விசமானதாலே சிறுவன் உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.