நினைவுத் தூபியை மீள அமைக்கும் செலவை பொறுப்பேற்க முன்வந்துள்ள திருமலை வாசி..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இதனை அறிவித்தார்.இன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை திருகோணமலையில் இருந்து ஒருவர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். பல்கலைகழக சூழலில் புதிய நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார். அதனை நான் பல்கலைகழக மாணவர்களிடமும் தெரிவித்துள்ளேன்’ எனவும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.