தற்போது கிடைத்த செய்தி.. அடைமழையின் எதிரொலி..இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு.!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து- 14 வான் கதவுகளும் 6″ அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நீர் வெளியேற செல்லுகின்ற தாழ்நிலப் பகுதியில் உள்ள கிராமங்களான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை போன்ற கிராமங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி மாவட்டஇடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.