வடக்கு கிழக்கு மக்களுக்கு முக்கிய தகவல்..திட்டமிட்டபடி மாலை 6 மணி வரை கதவடைப்பு போராட்டம்..!!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பிற்கு எதிரான கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி மாலை 6 மணி வரை இடம்பெறும் என பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதால், கதவடைப்பு இடம்பெறாது என சிவில் உடையில் கொச்சைத்தமிழில் பல நபர்கள், முக்கிய நகரங்களில் வர்த்தகர்களை குழப்பும் விதமான தகவலை பரப்பி வந்தனர்.இன்று காலையில் பல்கலைகழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகள், பொதுஅமைப்புக்கள் இணைந்து இன்று நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் கூட்டாக இந்த அறிவித்தலை விடுத்தனர்.மாலை 6 மணி வரை திட்டமிட்ட ரீதியில் போராட்டம் நடைபெறும்.