யாழில் திடீரென வீசிய மினி சூறாவளி….தூக்கி வீசப்பட்ட வீட்டுக் கூரைகள்.!

யாழில் நேற்றுப்பிற்பகல் மினி சூறாவளி தாக்கியதில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே பிற்பகல் 3 மணியளவில் மினி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த மினி சூறாவளி தாக்கத்தால் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மணற்காட்டு கந்தசுவாமி ஆலயம் ஒளி சுட்டான் ஞானவைரவர் ஆலயம் மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவையும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.