தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 8 பேருக்கு கொரோனா..!!

வடக்கில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 6 பேர் வவுனியா பசாரைச் சேர்ந்த வர்த்தகர்களாவர்.இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

அதேவேளை, வவுனியா பொது மருத்துவனைக்குச் சிகிக்சைக்கு வந்த இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரொனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று 265 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.