புதிய ஆண்டில் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்..கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய தரம் 02 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் நாளை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா கூறியுள்ளார்.சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.சுகாதார பரிந்துரைகள் அனைத்தும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பரிந்துரைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில், தொடர்ந்து அவதானம் செலுத்துவதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.எப்படியிருப்பினும், கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகர பாடசாலைகளை நாளைய தினம் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒரு வார காலப்பகுதிக்கு பாடசாலைகளை மூடி மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.