அதிவேகத்தினால் தலைகீழாக கவிழ்ந்த பேரூந்து..23 பேருக்கு நேர்ந்த கதி..!!

புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.