யாழ். பல்கலை முன்பாக மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம்..!! பாடசாலை மாணவனும் இணைவு..!!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 2ம் நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரும் நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஒருவனும் போராட்டத்தில் குதித்துள்ளான்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைத்து அகற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில், இன்று இரண்டாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் அப் போராட்டத்தில் இணைந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் சமூக போராட்டமாக மாறி வருகின்றது.