தற்போது கிடைத்த செய்தி..முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிப்பிற்கு எதிராக வடக்கு- கிழக்கு முழுவதும் 11ஆம் திகதி பூரண ஹர்த்தால்..!!

கோட்டாபய அரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, யாழ்ப்பண பல்கலைகழக மாணவர் ஒன்றியம், மத தலைவர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர்.