சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ். பருத்தித்துறையில் ஆசிரியருக்கு கொரோனா..!! வடமராட்சி கொரோனாவின் ஆரம்பம் இவரா..?

பருத்தித்துறை புலோலிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சற்றுமுன்னர் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புலோலியைச் சேர்ந்த மேற்படி நபர் பண்டாரவளை பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மந்திகை, ஓராங்கட்டையிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்றபோது, வெளிமாவட்டத்திலிருந்து வந்ததை அறிந்து சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொண்டதை அடுத்தே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களுடன் தொடர்புபட்ட ஏனையவர்கள் சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலும் ஓராங்கட்டையிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமும் முடக்கப்பட்டுள்ளது.இந்த வார தொடக்கத்தில் புலோலிப் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில்,அவருக்கு இந்த தொற்று எவ்வாறு சமூகத்தில் இருந்து தொற்றியது என சுகாதார அதிகாரிகளுக்கு கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபரும், இந்த வார ஆரம்பத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரும், நன்றாகத் தெரிந்தவர்கள் என்று கூறப்படுகின்ற நிலையில், தற்போது தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள வெளிமாவட்டத்திற்குச் சென்று வந்தவரிடமிருந்தே, முன்னையவருக்கும் கொரோனா தொற்றி இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகின்றது.