பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிந்த 523 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை!

பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த 523 விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தவுள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கொரோனா வைரஸ் பரவலாம் என அச்சத்தில் பொது மக்கள் பெருமளவில் கூடுவதை குறைக்கும் நோக்கில் மீன் வர்த்தக மத்திய நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வரையறுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்தது.
இதற்கமைவாக பேலியகொடை மீன் வர்த்தக சந்தையில் விற்பனை நடவடிக்கைகள், மொத்த விற்பனைக்கு மாத்திரம் வரையறுக்கப்படுவதுடன், சில்லறை விற்பனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பேலியகொடை மீன் சந்தையை இன்று புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.