ஒரே நாளில் அமெரிக்காவை புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ்..!! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று!!

அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டதோடு மூவாயிரத்து 914பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை இரண்டு கோடியே 24இலட்சத்து 56ஆயிரத்து 902பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 78ஆயிரத்து 149பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 88இலட்சத்து 18ஆயிரத்து 804பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 29ஆயிரத்து 140பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதுதவிர ஒரு கோடியே 32இலட்சத்து 59ஆயிரத்து 949பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.