கொழும்பிலிருந்து லொறியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்து மறைந்திருந்தவர்கள் தனிமைப்படுத்தலில்..

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் டாம் வீதியில் தங்கியிருந்தவர் உட்பட இன்னும் சிலர் லொறி ஒன்றில் ஏறி யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். இதையறிந்த வலி. மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், இவ்வாறு அங்கிருந்து வந்தவர்களை உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரோடு இன்னும் சிலர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.யாழ்ப்பாணத்துக்கு காய்ந்த மிளகாய் ஏற்றிச் சென்ற லொறியிலேயே இவர்கள் பயணித்துள்ளனர். லொறிச் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், யாழ் மாவட்டச் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி) தெரிவிக்கையில்,இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்தோ இல்லை வேறு மாகாணங்களில் இருந்தோ இன்னொரு மாவட்டத்திற்கோ இல்லை மாகாணத்திற்கோ செல்வதாயின் அரசு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.அதாவது என்ன காரணத்திற்காக பயணிக்கின்றீர்கள் என்ற தகுந்த பதில் இருத்தல் அவசியம். அத்தோடு அவ்வாறு பயணித்து உங்கள் இருப்பிடம் சென்றடைந்தவுடன் சுகாதார பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.எனவே, இக் கொரோனா சூழ்நிலையால் இவ்வாறு வேறு இடத்தில் இருந்து வேரொறு இடத்துக்கு செல்லும் உங்களின் பரிசோதனை என்பது மிகமிக கட்டாயமான விடயம்.கொரோனா வைரஸ் என்பது மனித கண்ணுக்கு புலப்படாத ஒரு நுண்ணியல். எனவே தயவுசெய்து இன்னொரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும்போது நீங்களும் அவ் வைரஸ் காவி ஆக இருக்கலாம். எனவே தயவுசெய்து இவ்வாறு வருபவர்கள், இல்லை ஏற்கனவே வந்தவர்கள் பரிசோதனையை மேர்கொள்ளாது இருப்பின் உடனே வைத்தியசாலைக்கு சென்று சோதனையை மேற்கொள்ளல் வேண்டும்.இவ்வாறு பரிசோதனையை மேற்கொள்ளாது இருப்பின் அவர்களைக் கண்டறியும்போது அவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.