சற்று முன் கிடைத்த செய்தி..யாழில் 5 பேருக்கு கொரோனா!!

யாழில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.கரவெட்டியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றும் இருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். உடுவில், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் அவர்கள்.மருதனார்மடம் கொத்தணியில் தொடர்புடைய ஒருவர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றியதையடுத்து, அங்கு பணியாற்றியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.