தொடர் வன்முறைகளின் எதிரொலி..வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு!!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக தொடர்புகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி – அவசர சேவைகளுக்கு: slembassy@slembassyusa.org,தூதரக விடயங்கள் : consularofficer@slembassyusa.org (மின்னஞ்சல்) தூதரக தொலைபேசி எண் : (202) 580 9546 போன்ற வழிகளில் தொடர்பு கொள்ள முடியும்.இதேவேளை அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டபோது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.