24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஊரடங்கு….!!

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.கொழும்பு கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு குறித்து முன்னர் வந்த செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.