ஜோ பைடனின் வெற்றிக்கு அதிகாரபூர்வமாக சான்றளித்த அமெரிக்க காங்கிரஸ்..!! ஜனவரி 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்பு..!!

ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் சார்பு கலவரக்காரர்கள் கேபிடல் ஹில் கட்டிடத்தை தாக்கி சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பின்னர், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் தேர்தல் கல்லூரி வெற்றிக்கு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக சான்றளித்துள்ளது.

இந்த சான்றிழப்பானது ஜனவரி 20 ஆம் திகதி பைடன் மற்றும் ஹாரிஸின் பதவியேற்பினை உறுதி செய்துள்ளது.சான்றிதழ் இறுதி செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின் பின்னர் டெனால்ட் ட்ரம்ப், நீண்டகாலம் ஒப்புக் கொள்ளாதிருந்த தேர்தல் இழப்பினை ஒப்புக் கொண்டார்.அவர் முடிவுக்கு உடன்படவில்லை என்றாலும் ஜனவரி 20 ஆம் திகதி ஒரு முறையான மாற்றம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்தல் கல்லூரியின் 306 வாக்குகளையும், டெனால்ட் ட்ரம்ப் மற்றும் பென்ஸ் தேர்தல் கல்லூரியின் 232 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாக தேர்தல் கல்லூரியின் 270 வாக்குகளைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.