யாழ் பல்கலை மருத்துபீட மாணவனுக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாத்தறையை சேர்ந்த இந்த மாணவனின் தாயார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இன்று (7) மதியம் அவசரஅவசரமாக மாணவனின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதில் மாணவனிற்கு தொற்று உறுதியானது.