உரிய அனுமதி பெறாமல் சுகாதார விதிமுறைகளை மீறி புலமைப்பரிசில் வகுப்பு..வடமராட்சியில் பாடசாலை அதிபர், ஆசிரியர் மாணவர்கள் தனிமைப்படுத்தல்.!! இழுத்து மூடப்பட்டது பாடசாலை!!

சுகாதார நடைமுறைகளை மீறி தரம் 5 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது என்று தெரிவித்து பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அந்தப் பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை 20ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதி பெறாது தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று பிரத்தியேக வகுப்பு நடத்தப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின்படி சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர், மாணவர்கள் வீடுகளை அனுப்பினர்.பாடசாலை அதிபர், வகுப்பு நடத்திய ஆசிரியர் ஆகியோர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், பாடசாலையில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.