கொரோனா வைரஸ் பரவியது இப்படித் தான்..இறுதியில் உண்மையை உடைத்த உலக சுகாதார அமைப்பு.!!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வகையில், நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது.

இதையடுத்து, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், சில ஆராய்ச்சி முடிவுகள் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து தான் பரவியது எனவும் தெரிவித்தது.இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், எங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் வௌவால்கள் அல்லது வேறுமிருகங்களிடம் இருந்து தான் பரவியுள்ளன என்பதை தெரிவிக்கின்றது.அதே நேரத்தில் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் உருவாக்கப்பட்டு பரவவில்லை’எனத் தெரிவித்துள்ளனர்.சீனா அரசு வேண்டுமென்றே தான் வைரஸை பரப்பியது என உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.