இலங்கையில் 46 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐ கடந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,247 பேராக உயர்ந்துள்ளது.அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.