13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள்..இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா வலியுறுத்து!!

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். நேற்றைய தினம், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரிலேயே வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் நேற்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இந்நிலையிலேயே, இன்று அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.இச்சந்திப்பில், இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளன.இதன் பின்னர் கொழும்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவிடமிருந்து கொவிட் தடுப்பூசி பெறும் கோரிக்கையையும் இலங்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று கொழும்பில் நடந்த கூட்டங்களின் போது இந்த கோரிக்கை அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இந்தியத் தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.நாங்கள் இப்போது கோவிட்டை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பைப் பார்க்கிறோம்.இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதில் இலங்கையின் ஆர்வம் காட்டும் தகவலை நான் எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கூட்டு ஊடக சந்திப்பில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர்,(இந்தியப் பெருங்கடல்) பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா தனது கடமையாகக் கருதுகிறதாக கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவைத் தூண்டவில்லை என்று அவர் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு இரு நாடுகளும் தொடர்ந்து உயர் மட்ட தொடர்புகளை பராமரித்து வருவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியமாக வாழ்க்கையை அமைக்க வேண்டுமென வலியுத்தியதாக தெரிவித்தார், அத்துடன், அரசியலமைப்பின் 13 வது திருத்தம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென்பதை அவர் முக்கியமாக வலியுறுத்தியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா தனது கடமையாகக் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.