சற்று முன்னர் கிடைத்த செய்தி..வல்லைப் பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒர் அபாய எச்சரிக்கை.!! மிக அவதானமாகச் செல்லுங்கள்!

யாழ் வடமராட்சி வல்லைப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்துச் சம்பத்தின் போது பெரும் தொகையான hand wash மற்றும் shampoo கள் கன்ரர் ரக வாகனத்தில் இருந்து பாலத்தில் வீழ்ந்து சிதறிக் காணப்படுகின்றன.

குறித்த வாகனம் சரிந்து வீழ்ந்த போதும், எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சில மணித்தியாலத்தில் அவ்விடத்திற்கு விரைந்த இராணுவ வீரர்களும் பொதுமக்களும் இணைந்து குறித்த வாகனத்தை பெரும் சிரமத்தின் மத்தியில் அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.எனினும், வீதியில் கொட்டப்பட்ட பெருமளவு நீர்த்தன்மை உடைய hand wash மற்றும் shampoo கள்  உடைந்து, வீதி முமுவதுமாக காணப்படுவதால் வழுக்கும் தன்மையுடன் வீதி காணப்படுகிறது.எனவே, இவ் வீதியினால் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக மெதுவாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.ஏனெனில், ஒவ்வொரு பொதுமக்களினதும் பாதுகாப்பும் முக்கியமானது ஆகையினால் இதன் பாரதூரத் தன்மையை கவனத்தில் எடுத்து மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். அத்துடன், இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிர்ந்து இவ் வீதியினால் செல்லும் பெறுமதி மிக்க உயிர்களை காப்பாற்றும் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.