தற்போது கிடைத்த செய்தி..வந்து போன கொரோனா நோயாளி..யாழ் நகரில் உள்ள பிரபல சைவ உணவகத்திற்குப் பூட்டு!!

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பருத்தித்துறை – புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், குறித்த உணவகத்தில் கடமையாற்றிய 11 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.