முல்லை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்..வீரியம் மிக்க கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வியாபாரி 11 நாளில் வீடு திரும்பினார்!!

புதுக்குடியிருப்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான மரக்கறி வியாபாரி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

11 நாள் சிகிச்சையின் பின் குணமடைந்து, இன்று (6) அதிகாலை வீடு திரும்பினார். அவர் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்.தம்புள்ளையிலிருந்து மரக்கறி கொண்டு வரும் ஒருவர் புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். ஐயப்ப பக்தரான அவர், மாலை கழற்றிய அன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.இதனால் சந்தை மூடப்பட்டதுடன், சந்தை வியாபாரிகள், ஐயப்ப பக்தர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களிற்கு இன்று (6) இரண்டாவது பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், புதுக்குடியிருப்பின் முதலாவது தொற்றாளர் இன்று வீடு திரும்பினார். அவருக்கு வீரியம் கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.