13.7 மில்லியன் நிதிமோசடி குற்றச்சாட்டில் சுவர்ணமஹால் நிறுவனப் பணிப்பாளர் உள்ளிட்ட மூவர் சற்று முன்னர் அதிரடியாகக் கைது..!!

சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்ய்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ETI பினான்ஸ் மற்றும் சுவர்ணமஹல் ஜுவலர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு எதிராக, 13.7 மில்லியன் பணத்தை சட்டவிரோதமாக பெற்றமை உள்ளிட்ட நிதிமுறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.