தீவிரமடையும் கொரோனா வைரஸ்…..கொழும்பின் சில பகுதிகளை முடக்கத் திட்டம்..!

கொழும்பின் சில பகுதிகளை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராஜகிரிய, அருணோதய மாவத்தை, ஒபேசேகரபுர ஆகிய பகுதிகளை முற்றாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய நிபுணரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஒபேசேகரபுர பகுதியில் உள்ள பாதிரியார் ஒருவரினால் கடந்த 15ஆம் திகதி குறித்த பகுதி மக்கள் சிலர், சூரியவெவ பகுதியில் உள்ள தேவாலயமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.