இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 86 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.