இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழிற்கு கொண்டுவரப்பட்ட 99 கொரோனா சந்தேகிகள்.!!

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கொரொனோ சந்தேகம் என கருதப்படும் 99 பேர் தனிமைப்படுத்தலுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொழும்பின் சில பகுதிகளில் கொரோனோ தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.இவ்வாறான நிலைமையில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட 99 பேரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இரரணுவ பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட இவர்கள் பலாலியிலுள்ள இராணுவ முகாமில் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்தும் 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.