தற்போது கிடைத்த செய்தி..யாழ்.புலோலியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதியானது.

இளைஞன் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மாதிரிகள் பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.சளி, காய்ச்சல் என்பவற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது.அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்ல் அவர் சிகிச்சை பெற்ற விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.அவருக்கு தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்பது தெரியவில்லை.அவர் பல இடங்களிலும் பருத்தித்துறை, நெல்லியடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.