பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய செய்தி..கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்..!!

கொரோனா அச்சம் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், கல்வி பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் மாத்தில் நடத்த தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த, ஏனைய பிரதேசங்களில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகள் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.