யாழ் பல்கலை பொறியியல் பீட மாணவனிற்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கில் நேற்று இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை உப கொத்தணியுடன் தொடர்புடையவர். மற்றையவர், கிளிநொச்சியிலுள்ள பொறியியல் பீடத்தில் கற்றுவரும் வவுனியா மாணவன்.

கிளிநொச்சியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் கற்கும் மாணவன் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் வவுனியா 6ஆம் ஒழுங்கையை சேர்ந்தவர்.கற்கைகளை தொடர பொறியியல் பீட வளாகத்திற்கு வந்த நிலையில், அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.நேற்று அவருக்கு தொற்று உறுதியானது. அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.