குடிபோதையில் மட்டையாகி விமானத்தை கோட்டை விட்ட பெரும் குடிமகன்!!

சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே குடிபோதையில் பயணியொருவர் மட்டையாகியுள்ளார். அவர் தனது விமானத்தையும் கோட்டை விட்டார்.கடந்த புதுவருட தினத்திலன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தமான் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு வந்த நபர், விமான நிலையத்திற்குள் போதை உச்சமடைந்து நிலத்தில் புரண்டு அரற்றியபடியிருந்தார்.விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் அவர் மூக்கு முட்ட குடித்து விட்டு வந்ததால், விமானத்தையும் கோட்டை விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.