வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பக் காத்திருக்கும் 68 ஆயிரம் இலங்கையர்கள்.!!

இலங்கை வருவதற்காக மேலும் 68 ஆயிரம் இலங்கையர்கள் காத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பங்கே தெரிவித்துள்ளார்.உலகளாவிய ரீதியில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.கடந்த பெப்ரவரி மாதம் முதல் சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து 33 இலங்கையர்களை அழைத்து வந்த நாள் முதல் தற்போது வரையில் 60470 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 137 நாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.அவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 40ஆயிரமாகும்.ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சென்னை, மெல்பர்ன், குவைத், தோஹா, டொரொன்டோ, சைப்ரஸ் மற்றும் டுபாயில் இருந்து 1400 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.